unamillai

ஊனமில்லை

ஊனமில்லை
வீரத்தின்
வெற்றிகால்கள்

விஞ்ஞானத்தை வெல்ல
விண்ணில் சுற்றுது
வெற்றிகோள்கள்

நேதாசியை
நினைத்தால்
நெஞ்சில் வருவதில்லை
அச்சம்

தேகத்தில் உள்ளது
தேசத்திற்காக கடேசி
உயிரின் மிச்சம்

இழந்தோம்
இணைந்திருந்த
கால்கள்

துடிக்கிறது
துப்பாக்கி ஏந்திட
தோள்கள்

உயர்ந்த உச்சி
உறையும் பனி
உதிரத்தில்
வெப்பம்

தொல்லைகளை
துரத்த
எல்லையில்
நிற்போம்

நாட்டுக்காக
இரவெல்லாம்
விழிப்போம்

நாட்டுக்குள்
நுழையும் நாய்களை
ஒழிப்போம்

காதில்
கேட்பதெல்லாம்
வெடிசத்தம்

வீரர்களை இழந்து
வென்றோம்
கார்கில் யுத்தம்

இறங்கியது எங்கள்
தாய்களின்
தாலிகொடி

அண்ணார்ந்து பார்க்க
ஏற்றினோம்
தேசத்தின்
தேசியகொடி

மகன் இறந்த
செய்தி கேட்டு
மண்ணில்புரண்டு
துடித்தாள்

மற்றொரு மகன்
இல்லையே
மண்ணைகாக்க என
புலம்பி வெடித்தால்

வீரத்திற்கும்
ஈரத்திற்கும்
எங்களில்
எல்லையில்லை

தேசத்தை வேருப்பவனும்
அறுப்பவனும் என்
தேசத்தின்
பிள்ளையில்லை

அருவிக்கவிஞர் ஆனந்தரவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>


Hit Counter provided by technology news