vananthu

வண்ணத்து பூச்சிகள்

வண்ணத்து பூச்சிகள்
சிறகுகள் விரிக்குது
வறுமையை விரட்ட
வாழ்வுதேடி பறக்குது

தொலைந்த வாழ்க்கையை
தூய்மை ஆக்கவா
தூய்மையான வாழ்வை
முதுமையாய் போக்கவா

விடியலை கானது
வீட்டுக்குள் கிடக்கவா
கனத்த மனதோடு
காலத்தை கழிக்கவா

உறவுகள் நலத்திற்கு
ஓடாய் உளைக்கவா
நாள்கணக்க உருகி
நரகத்தை சுமக்கவா

பாசத்தை சுமந்து
பருவத்தை தொலைக்கவா
சோகத்தை அணிந்து
சொந்தங்கள் பிழைக்கவா

விழிநீர் துடைக்க
வியர்வையில் குளிக்கவா
தனிமையில் அழுது
தலையணையை நனைக்கவா

பாவம் அறியாமலே
பாவசொல்லால் துடிக்கவா
குப்பையாய் கிடந்தது
குழந்தைகள் படிக்கவா

பூவான உடலை
சருகாகி உதிரவா
பாலையில் பகலிலே
மெழுகாகி உருகவா

கஷ்டப்பட்டு ஓடத்தை
கரையில் சேர்க்கவா
நாடிநரம்பு தளர்ந்து
நரைகலாய் சேரவா

அருவிக்கவிஞர் ஆனந்தரவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>


Hit Counter provided by technology news