Tamil_News_3447796106339

வாகனபுகை கட்டுபாட்டு சான்றிதழ் இல்லாத வண்டிகளுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் இல்லை!!!

புதுடெல்லி: வாகனபுகை கட்டுபாட்டு சான்றிதழ் இல்லாத வண்டிகளுக்கு வாகனபுகை கட்டுபாட்டு வழங்க வேண்டாம் என்ற அதிரடியான முடிவை டெல்லி நிர்வாகம் எடுத்துள்ளது. டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இல்லாத நிலையில் அரசு தலைமை செயலாளர் சோப்ரா தலைமையில் நேற்று நடந்த உயர்மட்ட  அதிகாரிகளின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. டிசம்பர் முதல் தேதியில் இருந்து இந்த முடிவு அமலுக்கு வருவதாக டெல்லி போக்குவரத்து காவல் சிறப்பு ஆணையாளர் தெரிவித்துள்ளார். 

இதற்காக டெல்லி காவல்துறை விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. ஒவ்வொரு பெட்ரோல் நிலையத்திலும் 2 அல்லது 3 போக்குவரத்து போலீசார் இதற்காக நியமிக்கப்பட்டுள்ளனர். பெட்ரோல் வழங்கு இயந்திரத்தின் அருகிலும், வெளிவாயிலிலும் இவர்கள்« நிறுத்தப்பட்டு புகைக்கட்டுபாட்டு சான்றுகள் உள்ளதா என சோதனை செய்வார்கள். 

சான்றிதழ் இல்லாதவர்களுக்கு பெட்ரோல் அல்லது டீசல் மறுக்கப்படுவதுடன் ரூ.1000 அபராதமும் உடனே விதிக்கப்படும். நாளுக்கு நாள் மாசடைந்து வரும் சுற்றுசூழலை பாதுகாக்க இந்த திட்டம் கொண்டு வருவதாக டெல்லி நிர்வாகம் தெரிவித்துள்ளது. திட்டம் வெற்றி அடைந்தால் பிற நகரங்களுக்கும் இது விரிவுபடுத்தலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

- தினகரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>


Hit Counter provided by technology news