sushma_2282534f

சுஷ்மாவுடன் சமரவீரா சந்திப்பு: இந்திய – இலங்கை உறவை வலுப்படுத்த ஆலோசனை

ளர் மைத்ரிபால சிறிசேனா அமோக வெற்றி பெற்று அந்த நாட்டின் புதிய அதிபராக பதவி யேற்றார். சிறிசேனாவின் செய்தித் தொடர்பாளராக இருந்த மங்கள சமரவீரா நாட்டின் புதிய வெளியுறவுத் துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.

இந்நிலையில் இந்தியாவின் அழைப்பை ஏற்று மங்கள சமர வீரா மூன்று நாள் பயணமாக கொழும்பில் இருந்து நேற்று டெல்லி சென்றார். அங்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை சந்தித்துப் பேசினார்.

முன்னதாக நிருபர்களிடம் பேசிய அவர், பதவியேற்ற ஐந்து நாள்களுக்குள் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண் டுள்ளேன், இதன்மூலம் இந்திய உறவுக்கு இலங்கை முன்னுரிமை அளிப்பதை புரிந்து கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

சுஷ்மாவை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியை அமைச்சர் சமரவீரா இன்று சந்தித்துப் பேசு கிறார். அப்போது பிராந்திய கடல் சார் பாதுகாப்பு உட்பட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. இலங்கை அதிபர் சிறிசேனா பதவியேற்ற பிறகு தனது முதல் வெளிநாட்டு பயணமாக அடுத்த மாதம் இந்தியாவுக்கு வருகை தர திட்டமிட்டிருப்பது குறிப்பிடத் தக்கது.

இந்தியாவுக்கு முன்னுரிமை

முன்னாள் அதிபர் ராஜபக்சவின் ஆட்சியின்போது இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையேயான நெருக்கம் அதிகரித்தது. இலங் கையில் துறைமுகம் உட்பட பல்வேறு திட்டங்களில் சீனாவுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.

தற்போது ஆட்சி மாற்றம் ஏற் பட்டிருப்பதால் இந்திய உறவுக்கு முன்னுரிமை அளிப்போம் என்றும் சீனாவுடன் இணக்கமான அணுகு முறையை கடைப்பிடிப்போம் என் றும் சிறிசேனா அரசு அறிவித் துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>


Hit Counter provided by technology news