98fdc3265bfa7288cc6112ee2171482a_S

உலகக் கோப்பை – UAE போராடித் தோல்வி

நெல்சன் – உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் ஜிம்பாப்வே, ஐக்கிய அரபு அமீரகத்தினை வென்றது.

நியுசிலாந்தின் நெல்சன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதன் முறையாக உலகக் கோப்பையில் களமிறங்கும் அமீரக அணியினை முதலில் துடுப்பெடுத்து ஆடுமாறு ஜிம்பாப்பே அணித்தலைவர் சிகும்பரா கேட்டுக் கொண்டார். முதலில் சற்று தடுமாற்றத்துடன் விளையாடிய அந்த அணி, குர்ரம் கான் மற்றும் சைமான் அன்வர் ஆகியோரின் திறமையான துடுப்பாட்டத்தினால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 285 ஓட்டங்களை குவித்தது.

சைமான் அன்வர் 67 ஓட்டங்களும், குர்ரம் கான் 45 ஓட்டங்களும் எடுத்தனர். ஆட்டத்தின் இறுதியில் அதிரடியாக விளையாடி அம்ஜத் ஜாவித் மற்றும் முஹம்மத் நவீத் ஆகியோர் 6 ஓவர்களில் 53 ஓட்டங்கள் குவித்ததன் மூலம் அதிக ஓட்டங்களை அந்த அணியால் எடுக்க முடிந்தது. அமீரக அணியைச் சார்ந்த பலரும் தொழில் முறை கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் 286 ஓட்டத்தினை இலக்காகக் கொண்டு ஆடிய ஜிம்பாப்வே, ஒரு கட்டத்தில் 5 விக்கெட்களை இழந்து 167 ஓட்டங்களை எடுத்து தள்ளாடியது. பின்னர் ஜோடி சேர்ந்த வில்லியம்ஸ் மற்றும் இர்வின் 83 ஓட்டங்களை 62 பந்துகளில் எடுத்து அமீரகத்தின் வெற்றிக் கனவைத் தகர்த்தனர். 48 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து ஜிம்பாப்வே வெற்றி இலக்கினை எட்டியது. வில்லியம்ஸ் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 76 ஓட்டங்கள் எடுத்தார்.

ஜிம்பாப்வே அணிக்காக டெய்லர் 47, சிக்கந்தர் ராஸா 46 மற்றும் இர்வின் 42 ஓட்டங்கள் எடுத்தனர். ஜிம்பாப்வே அணியின் சகாப்வா ஹிட் விக்கெட் மூலம் ஆட்டமிழந்தார். இதற்கு முன்பாக 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் ஜிம்பாப்வேயின் சிபாந்தா இந்த முறையில் ஆட்டமிழந்த பிறகு சகாப்வா இவ்வாறு ஆட்டமிழந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>


Hit Counter provided by technology news