03-1422967704-cricket-indian-team2345-600

தெ.ஆப்ரிக்காவை வீழ்த்தியது இந்தியா

மெல்போர்ன்: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில், இந்தியா ரன் 130 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. உலக கோப்பை வரலாற்றில் எப்போதும் சவாலாக இருக்கும் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. 


மெல்போர்னில் இன்று நடந்த உலக கோப்பை தொடர் பி பிரிவு லீக் போட்டியில், நடப்பு சாம்பியன் இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் விளையாடின. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் தோனி, பேட்டிங் தேர்வு செய்தார். பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில் விளையாடிய அதே வீரர்கள் ஆடினர். இந்திய அணிக்கு ஷிகர் தவான், ரோகித் சர்மா துவக்கம் கொடுத்தனர். ரோகித் சர்மா (0) ரன்-அவுட் ஆனார். பின் இணைந்த தவான், விராத் கோஹ்லி ஜோடி பொறுப்பாக ஆடியது. இரண்டாவது விக்கெட்டுக்கு 127 ரன்கள் சேர்த்த போது இம்ரான் தாகிர் சுழலில் கோஹ்லி (46) அரைசத வாய்ப்பை இழந்து வெளியேறினார். அபாரமாக ஆடிய ஷிகர் தவான் சதம் (137 ) அடித்தார்.


இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டு இழப்பிற்கு 307 ரன்கள் எடுத்தது. 308 ரன் எடுத்தால் வெற்றி என கடின இலக்குடன் களம் இறங்கிய தெ.ஆப்ரிக்கா ஆரம்பத்தில் நிதானமாக ஆடியது. 28 ஓவர்களை கடந்த போது 4 விக்கெட்டுகளை இழந்தது. அம்லா, டி காக், வில்லிர்ஸ், பிளசிஸ் ஆகியோரை வீழ்த்தியதும், இந்திய அணி வீரர்கள் சற்று உற்சாகமடைந்தனர். தொடர்ந்து போராடிய தெ.ஆப்ரிக்க அணி ( 40 ஓவரில் ) அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 177ரன் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இந்தியா 130 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்திய அணிக்கு ஷிகர் தவான், ரோகித் சர்மா துவக்கம் கொடுத்தனர். ரோகித் சர்மா (0) ‘ரன்-அவுட்’ ஆனார். பின் இணைந்த தவான், விராத் கோஹ்லி ஜோடி பொறுப்பாக ஆடியது. இரண்டாவது விக்கெட்டுக்கு 127 ரன்கள் சேர்த்த போது இம்ரான் தாகிர் ‘சுழலில்’ கோஹ்லி (46) அரைசத வாய்ப்பை இழந்து வெளியேறினார். அபாரமாக ஆடிய ஷிகர் தவான் சதம் அடித்தார். இவர், 137 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அசத்தலாக ஆடிய ரகானே, அரைசதம் கடந்தார். ரெய்னா (6), கேப்டன் தோனி (18), ரவிந்திர ஜடேஜா (2) நிலைக்கவில்லை. இந்திய அணி 50 ஓவரில், 7 விக்கெட்டுக்கு 307 ரன்கள் எடுத்தது. அஷ்வின் (5), முகமது ஷிமி (4) அவுட்டாகாமல் இருந்தனர். தென் ஆப்ரிக்கா சார்பில் மார்னே மார்கல் 2 விக்கெட் கைப்பற்றினார்.


மோகித் அசத்தல்:

கடின இலக்கை விரட்டிய தென் ஆப்ரிக்க அணிக்கு குயின்டன் டி காக் (7) ஏமாற்றினார். மோகித் சர்மா பந்தில் ஆம்லா (22) அவுட்டானார். பின் இணைந்த டுபிளசி, கேப்டன் டிவிலியர்ஸ் ஜோடி நிதானமாக ஆடியது. மூன்றாவது விக்கெட்டுக்கு 68 ரன்கள் சேர்த்த போது டிவிலியர்ஸ் (30) ‘ரன்-அவுட்’ ஆனார். பொறுப்பாக ஆடிய டுபிளசி அரைசதம் கடந்தார். இவர், 55 ரன்கள் எடுத்த போது மோகித் சர்மா பந்தில் பெவிலியன் திரும்பினார். டுமினி (6), மில்லர் (22), பிலாண்டர் (0) என பின் வந்தவர்களும் ஏமாற்றினர். ஸ்டைன் (1), மார்னே மார்கல் (2) ஒற்றை இலக்கில் வெளியேறினர். இம்ரான் தாகிர் 8 ரன்களில் வெளியேற, தென் ஆப்ரிக்க அணி 40.2 ஓவரில் 177 ரன்களுக்கு ஆல்-அவுட்டாகி தோல்வியடைந்தது. பார்னல் (17) அவுட்டாகாமல் இருந்தார். இந்தியா சார்பில் அஷ்வின் 3, மோகித், ஷமி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.


மாறியது வரலாறு

உலக கோப்பை அரங்கில், தென் ஆப்ரிக்காவுடன் விளையாடிய 3 (1992, 1999, 2011) போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியடைந்திருந்தது. இன்றைய வெற்றியின் மூலம், முதல் முறையாக உலக கோப்பை தொடரில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி இந்தியா வரலாறு படைத்தது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>


Hit Counter provided by technology news