IMG-20151014-WA0080

‘இஸ்லாத்தின் பார்வையில் குழந்தைகள் தினம்!!!

 
குழந்தைகள் தினம் கொண்டாடுவதும் குழந்தைகளிடம் அன்பு செலுத்துவதும் ஒரு நாளோடு நின்றுவிடக் கூடாது.
 
அது ஒவ்வொரு நாளும் தொடர வேண்டும். குழந்தைகளிடம் இரக்கம் காட்டாதவனும் பெரியவர்களுக்கு மரியாதை செலுத்தாதவனும் நம்மை சேர்ந்தவனல்ல! என்று இறைத்தூதர் நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்.
 
நமது குழந்தைகளை இறையச்சம் கொண்டவர்களாகவும் ஒழுக்கமுள்ளவர்களாகவும் வளர்க்க வேண்டும். அவர்களுக்கு நல்ல கல்வியை வழங்க வேண்டும்.
 
‘நல்ல குழந்தைகளை பெற நல்ல மனைவியை முதலில் தேர்ந்தெடு, உறவு கொள்ளும் போதே இறைவனிடம் பிரார்த்தனை செய்’ என்று இஸ்லாம் ஆரம்பத்திலேயே அடித்தளமிடுகிறது. குழந்தைகளை திட்டுவதும் காரணமின்றி அடிப்பதும் அவர்களை கவனிப்பதில் நேரம் ஒதுக்காமல் இருப்பதும் அவை பெற்றோரிடத்திலிருந்து விலகி செல்ல காரணமாகி விடுகின்றது. நம்முடைய அறிவுரைகளை விட நமது செயல்களைத்தான் குழந்தைகள் உற்று நோக்குகின்றன.
 
எனவே நம்மை முதலில் சீர்படுத்திக் கொள்ள வேண்டும்.
 
டிவி, சினிமா, சீரியல் போன்றவை தான் குழந்தைகளின் முதல் எதிரி. அவற்றை நாமும் தவிர்த்துக் கொண்டு குழந்தைகளையும் அவற்றிலிருந்து விலகி இருக்க செய்ய வேண்டும்.
 
எனவே நாம் நமது குழந்தைகளிடத்தில் அன்பு செலுத்துவோம், இரக்கம் காட்டுவோம்.
 
தீய பழக்கங்களிலிருந்து நமது குழந்தைகளை விடுவிப்போம். நல்ல குழந்தைகளால் தான் நாட்டில் மறுமலர்ச்சி ஏற்படும்!!!
 
 
 
குழந்தைகளுக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும்
 
குழந்தைகளுக்காக பிரார்த்தனை செய்வது பெற்றோர்கள் செய்ய வேண்டிய முக்கியமான காரியமாகும்.
 
நாம் எவ்வளவு தான் திருத்துவதற்கு முயற்சி செய்தாலும் அல்லாஹ் நாடாவிடால் நம் குழந்தைகள் நல்லவர்களாக உருவெடுக்க முடியாது. எனவே இந்த விஷயத்தில் அல்லாஹ்வின் உதவியை அவசியம் கேட்க வேண்டும்.
 
இறைத்தூதரின் மகனாக இருந்தாலும் அல்லாஹ்வின் நாட்டம் இருந்தால் தான் அவன் நல்லவனாக முடியும். எனவே தான் நபிமார்கள் தங்கள் பிள்ளைகள் நல்லவர்களாகத் திகழ வேண்டும் என்று பிரார்த்தனை செய்துள்ளார்கள்.
 
எங்கள் இறைவா! எங்களை உனக்குக் கட்டுப்பட்டோராகவும், எங்கள் வழித் தோன்றல்களை உனக்குக் கட்டுப்பட்டு நடக்கும் சமுதாயமாகவும் ஆக்குவாயாக! எங்கள் வழிபாட்டு முறைகளை எங்களுக்குக் காட்டித் தருவாயாக! எங்களை மன்னிப்பாயாக! நீ மன்னிப்பை ஏற்பவன் ; நிகரற்ற அன்புடையோன் (என்று இப்ராஹீமும் இஸ்மாயீலும் பிரார்த்தனை செய்தார்கள்).
அல்குர்ஆன் (2 : 128)
 
رَبِّ اجْعَلْنِي مُقِيمَ الصَّلَاةِ وَمِنْ ذُرِّيَّتِي رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاءِ
 
என் இறைவா! என்னையும், என் சந்ததிகளிலும் தொழுகையை நிலை நாட்டுவோராக ஆக்குவாயாக! எங்கள் இறைவா! எனது பிரார்த்தனையை ஏற்பாயாக! (என்று இப்ராஹீம் கூறினார்.)
அல்குர்ஆன் (14 : 40) “
 
وَالَّذِينَ يَقُولُونَ رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا
 
 
எங்கள் இறைவா! எங்கள் வாழ்க்கைத் துணைகளிலிருந்தும், மக்களிலிருந்தும் எங்களுக்குக் கண் குளிர்ச்சியைத் தருவாயாக! (உன்னை) அஞ்சுவோருக்கு முன்னோடியாகவும் எங்களை ஆக்குவாயாக!” என்று அவர்கள் கூறுகின்றனர்.
அல்குர்ஆன் (25 : 74)
 
- #மண்ணடிகாகா (www.mannadykaka.net)
 
நன்றி: முஹம்மது மாஹீன்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>


Hit Counter provided by technology news