அதிமுக கூட்டணியிலிருந்து மற்றொரு அமைப்பு வெளியேறியது

அதிமுக கூட்டணியிலிருந்து மற்றொரு அமைப்பு வெளியேறியது?

அதிமுக கூட்டணியிலிருந்து மற்றொரு அமைப்பு வெளியேறியது?

தமிழக அரசியலில் புதிய திருப்பமாக அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மற்றொரு அணியான  இந்தியதேசியலீக்  அதிமுகவிற்கு கெடு விதித்துள்ளது .

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் அதிமுகவிற்கும் இடையே ஏற்பட்ட கூட்டணி பேச்சு வார்த்தையில் முக்கிய புள்ளியாக செயல்பட்டவர் கோனிகா பஷீர் .

இந்திய தேசியலீகின் தமிழ் மாநில தலைவரான இவர் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளித்து தமிழகம் முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடு பட்டுகொண்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று தமிழக அரசியலில் ஏற்பட்ட பெரும் பூகம்பத்தில் அதிமுகவுக்கு கொடுக்கப்பட்ட ஆதரவை ததஜ வாபஸ் வாங்கியது.

இதனை தொடர்ந்து மற்றொரு இஸ்லாமிய அமைப்பான இந்திய தவ்ஹீத் ஜமாஅத் உள்ளிட்ட  அமைப்புகளுக்கு சமுதாய பிரமுகர்கள் அதிமுக கூட்டணியில் இருந்து வெளிவர அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது .

இதனை தொடர்ந்து அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்துள்ள இந்திய தேசிய லீகின் மாநிலதலைவர் பசீர்அஹமதுஅவர்கள் அஇஅதிமுகவிற்குகெடு விதித்துள்ளார் அதில் வருகின்ற 15ஆம்தேதிக்குள் அஇஅதிமுக-பாஜக உறவு
பற்றி தெளிவான விளக்கம் அளிக்கவேண்டும் என நிபந்தனை விதித்துள்ளார்

இல்லையல் அதிமுகவுக்கு அளிக்கப்பட்டு வந்த ஆதரவு வாபஸ் பெறப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நன்றி : அதிரை எக்ஸ்பிரஸ் 

One comment

  1. நன்றி : அதிரை எக்ஸ்பிரஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>


Hit Counter provided by technology news