aaaa

அது அவமான இஃப்தார்…!

இந்தியாவிலுள்ள முஸ்லிம் நாடுகளின் தூதர்களை அழைத்து ஜூலை இரண்டாம் தேதி ஆர்எஸ்எஸ் இஃப்தார் விருந்து அளிக்க இருப்பதாகச் செய்திகள் கூறுகின்றன.

இதன் நோக்கம் நல்லிணக்கமான- ‘கலவரமற்ற இந்தியாவை‘ உருவாக்குவதாம்..!!!!!

பொழுது விடிந்து பொழுது போனால் முஸ்லிம்கள் குறித்தும் இஸ்லாம் குறித்தும் இல்லாத பொல்லாத வசைகளைப் பாடி நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிக்கும் உறுப்பினர்களைக் கொண்ட ஓர் அமைப்பு நல்லிணக்கத்துக்காக இஃப்தார் விருந்து நடத்துகிறதாம்…

முஸ்லிம் நாடுகளின் தூதர்கள் ஆர்எஸ்எஸ்ஸின் இந்த இஃப்தார் விருந்தை முழுவதுமாகப் புறக்கணிக்க வேண்டும். (இந்திய அரசு ஏற்பாடு செய்தால் அது வேறு விஷயம். ஆர்எஸ்எஸ் என்பது இந்திய நந்தவனத்தில் புகுந்த நச்சுப் பாம்பு)

இதற்கு மாறாக, அந்தந்த நாட்டுத் தூதரகங்களின் சார்பாக, ஆர்எஸ்எஸ்ஸுக்கும் இந்துத்துவ அறிவு“சீவி”களுக்கும் சிறப்பு இஃப்தார் விருந்துக்கு ஏற்பாடு செய்து இஸ்லாத்தின் சத்திய அழைப்பையும் அமைதிக்கான செய்தியையும் அவர்களுக்கு எடுத்துரைக்கலாம்.

(உள்ளூர் அளவில் கூட முஸ்லிம் அமைப்புகள்- இயக்கங்கள் இந்தக் கோணத்தில் முயற்சி செய்யலாம். அதாவது ஆர்எஸ்எஸ்- இந்துத்துவவாதிகளுக்கு மட்டுமே என்று சிறப்பு இஃப்தார் விருந்துக்கு ஏற்பாடு செய்து இஸ்லாம் குறித்த அவர்களின் தவறான கண்ணோட்டங்களைக் களையலாம். மனம் திறந்த கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யலாம்.)

ஆனால் முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் அழிப்பதையே தன் சித்தாந்தமாக- குறிக்கோளாகக் கொண்ட ஓர் அமைப்பு- “முஸ்லிம்கள் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்” என்று ஆணவத்துடன் கொக்கரிக்கும் ஓர் அமைப்பு ஏற்பாடு செய்யும் இஃப்தார் விருந்தில் கலந்து கொள்வது முஸ்லிம் நாடுகளுக்குத்தான் அவமானம்.

நரிகள் அளிக்கும் விருந்தில் ராஜாளிகளுக்கு என்ன வேலை?
-சிராஜுல்ஹஸன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>


Hit Counter provided by technology news