aaaa

முஸ்லீம்காவல் துறை அதிகாரி இடைநீக்கம்

அமெரிக்காவில் தாடியை நீக்க மறுத்த #முஸ்லீம்காவல் துறை அதிகாரி பணியிலிருந்து இடைநீக்கம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வலியுறுத்திய சுன்னத்தான தாடியை சில இஸ்லாமியர்கள் பேணாததால் ஏற்படும் விளைவு இதுதான்…

அமெரிக்காவின் நியுயார்க் நகரில் காவல் துறையில் பணியாற்றி வரும் மசூத் சையத் (32) என்ற முஸ்லிம் அதிகாரி, தனது தாடியை அகற்ற மறுத்த காரணத்தால் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். நியுயார்க் காவல் துறை விதிகளின்படி, அதில் பணியாற்றும் அதிகாரிகள் தாடி வைக்கக் கூடாது.

ஆனால் சையத், ஒரு மில்லி மீட்டர் அளவு தாடி வைத்துக் கொள்ள அனுமதி பெற்றிருந்தார். அந்த அளவைத் தாண்டிய போதிலும், கடந்த 2015ம் ஆண்டு வரை அவருக்கு பிரச்சனை ஏற்படவில்லை. ஆனால் தற்போது சையத்திடம் தனது தாடியை நீக்குமாறு கடந்த திங்கட்கிழமையன்று உயரதிகாரிகள் உத்தரவிட்டனர்.

அதை ஏற்க மறுத்ததால், கடந்த செவ்வாய்க்கிழமையன்று அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். 30 நாட்களுக்கு ஊதியம் இல்லாமல் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள அவர், தொடர்ந்து தாடியை அகற்ற மறுத்தால், பணியிலிருந்து நீக்கப்படுவார் என அவருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் காவல்துறை கூறியுள்ளது.

புதன்கிழமைன்று அவசர வழக்காக இப் பிரச்சனை விசாரிக்கப்பட்ட நிலையில், சையத்தின் ஊதியத்தை நிறுத்தி வைக்கக் கூடாது என்றும், ஜூலை 8ம் தேதி இந்த வழக்கின் அடுத்த விசாரணை நடைபெறும் வரை, அவர் மீது வேறு எந்த ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

செய்தி :- தினகரன்.

இஸ்லாமியன் என்று பெயரளவில் சொல்லிக்கொண்டு நபிகள் நாயகம் காட்டித்தந்த தாடியை வளர்க்காமல் இருப்பவர்களே இதற்கு காரணம்…

எங்கள் மார்க்கம் எங்களுக்கு தாடிவளர்ப்பதை போதிக்கின்றது , எவனுக்காகவும் நாங்கள் எங்களின் நபிகள் நாயகத்தின் சுன்னத்தை புறக்கணிக்க மாட்டோம் என்று நூறு சதவீத இஸ்லாமியர்களும் உறுதியாக இருந்திருந்தால் கண்டவனும் கண்டனம் தெரிவிக்கும் நிலைக்கு ஆளாகியிருப்போமா???

அதேநேரம் உங்களிடம் ஒரு கேள்வி சீக்கியர்களின் தாடியை எவனாவது வளர்ப்பதற்கு தடை விதிக்கின்றானா???

இல்லை என்பதே நிசர்சனமான உண்மை , காரணம் அவர்கள் அனைவரும் தாடி பற்றிய ஒருமித்த கருத்தில் ஒற்றுமையாக இருப்பதே…

ஆனால் , நம் சகோதரர்களின் நிலைமை???

இனியாவது சிந்தித்து செயல்படுங்கள்…

தாடியை வளரவிடுங்கள் ,மீசையை கத்தரித்து கொள்ளுங்கள்- நபிகள் நாயகம் (புஹாரி 5892)

நாம் மய்யித்தான போதும் நம்மோடு வரும் ஒரே சுன்னத் தாடி மட்டும் தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

தினகரன் செய்தி லிங்க்

http://m.dinakaran.com/Detail.asp?Nid=226331

-தாரிக் இப்ராஹிம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>


Hit Counter provided by technology news