full_d771dbd186

தொழில் வெற்றி பெற செயலாக்கம் அவசியம்!

#தொழில்_வெற்றி பெற வித்தியாசமான சிந்தனையுடன் கூடிய செயலாக்கம் அவசியம்!

புதுமையாக்கம் (Innovation)

புது யுக தொழில் முனைவில் ஐடியாக்கள் தான் அடிப்படை சக்தியாக இருக்கிறது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. நவீன தொழில் யுகத்தில் “இன்னோவேடிவ் பிசினஸ்” அதாவது புதுமையான தொழில் முயற்சி என்ற சொல்லாடலை அதிகமாகப் பார்க்கிறோம். ஐடியா என்பதும் இன்னோவேஷன் என்பதுவும் ஒன்றா அல்லது வேறு வேறா என்ற குழப்பமும் பலரிடமும் இருக்கிறது.

செயல் ரீதியாக இந்த கருத்தாக்கங்களும் விளக்கங்களும் முக்கியமில்லை என்றாலும் ஒரு ஐடியாவை சக்திமிக்க தொழில் வடிவமாக மாற்றுவதற்கு இந்த கருத்துக்களை புரிந்து கொள்வது உதவியாக இருக்கும். எனவே இந்த கட்டுரையில் இன்னோவேஷன் பற்றிய சில விளக்கங்களை பார்க்கலாம்.

“இன்னொவேடிவ் திங்கிங்” என்றால் என்ன?

பொதுவாக ‘வித்தியாசமாக சிந்தித்தல்’ அல்லது ‘மாறுபட்டு சிந்தித்தல்’ என்று சொல்லப்படுகிறது. இங்கே ‘சிந்தித்தலின்’ வெளிப்பாடு தான் ஒரு ஐடியா. அந்த சிந்தனையை அல்லது ஐடியாவை செயல் படுத்தல் இன்னோவேஷன் என்று சொல்லப்படுகிறது.

இன்னும் கொஞ்சம் ஆழமாக பார்ப்போமேயானால் ஒரு பொருளை அல்லது ஆக்கத்தை நல்ல இன்னோவேஷன் என்று சொன்னால் அதில் கீழ்கண்ட மூன்று விஷயங்கள் இருக்க வேண்டும்:

1. ஒரு சூப்பர் ஐடியா (idea)

2. அதை திறம்பட செயலாக்கும் முறை (Process)

3. அதனால் உருவாகும் ஒரு நல்ல விளைவு (Good Impact)

ஐடியா பெரிதா? செயலாக்கம் பெரிதா?

இந்த அணுகுமுறையில் ஐடியா பெரிதா அதை செயல்படுத்தும் தன்மை பெரிதா என்று பார்த்தால் இரண்டுமே முக்கியம் என்று மேலோட்டமாக தோன்றும். ஒரு வகையில் இது சரி என்றாலும் என்னைப்பொறுத்தவரை செயலாக்கம் தான் முக்கியம் என்று கூறுவேன்.

ஆராய்ந்து பார்க்கும் போது பிரமாதமாக தெரியும் ஐடியாக்கள் பல படு தோல்வியில் முடிந்திருப்பதை பார்க்கலாம். சுமாரான பல ஐடியாக்கள் பெரும் வெற்றி பெற்றிருப்பதை பார்க்கலாம்.

ஐடியாக்களை பொத்திப் பொத்திப் பாதுகாப்பதை விட தைரியமாக பலரிடமும் அதைபற்றி விவாதிப்பது தான் ஆக்கபூர்வமான அணுகு முறையாக இருக்கும். ஒரே மாதிரியான ஐடியாக்கள் பலவும் களத்துக்கு வருவதையும் அதில் ஒன்றிரண்டு மட்டுமே வெற்றி பெறுவதையும் பார்க்கிறோம். முகநூல் (#Facebook) வருவற்கு முன்பே ப்ரெண்ட்ஸ்டெர் (#Friendster) மாற்றும் மைஸ்பேஸ் (#Myspace) போன்ற சமூக வலைத்தளங்கள் குறிப்பிட்டு சொல்லும் வகையில் இருந்தன.

ஆனால் அவை ஃபேஸ்புக் போல வெற்றி பெறவில்லை. அது போல கூகிள் தேடு தளத்துக்கு முன்னரே யாஹூ போன்ற பல்வேறு தேடு தளங்கள் இயங்கி வந்தன-வருகின்றன. இது போல எல்லாத்துறைகளிலும் பல உதாரணங்களை பார்க்கலாம்.

ஆக ஐடியாவை விட செயலாக்கமே (execution) முக்கியமானது என்பது கண்கூடு. பல நல்ல ஐடியாக்கள் தோல்வி அடைவற்கு காரணம் அவை சக்தி மிக்க இன்னோவேஷன்களாக மாற்றப்படாததே. இத்தகைய தோல்விகளுக்கு செயலாக்க நிகழ்வில் திறனற்ற நிர்வாகம், பலமற்ற வியாபார வியூகங்கள் மற்றும் அணுகுமுறைகள், தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள், திறனற்ற வேலையாட்கள் என பல காரணங்கள் இருக்கலாம். சில நேரங்களில் அரசு அல்லது போட்டி நிறுவனங்களின் அணுகுமுறைகள் காரணமாகவும் காலச் சூழ்நிலைகளாலும் (timing) கூட தோல்விகள் உருவாகலாம்.

இன்னோவேஷனின் சக்தி எப்படி அறியப்படுகிறது?

பொதுவாக வழக்கத்திலிருக்கும் ஒரு தேவை அல்லது பிரச்சினைக்கு புதியதொரு முதல் தீர்வோ அல்லது ஏற்கனவே இருந்து வரும் ஒரு தீர்வை விட மேம்படுத்தப்பட்ட / மாறுபட்ட ஒரு புதிய தீர்வோ இன்னோவேஷன் என்று அழைக்கப்படுகிறது. அத்தகைய ஒரு தீர்வு குறைந்த செலவு (Cost) பிடிக்கும் போதோ அல்லது அதிக திறனை (#efficiency) வெளிப்படுத்தும் போதோ அல்லது அந்த தீர்வு தனது செயலாக்கத்துக்கு குறைந்த நேரம் (#Time) எடுத்துக்கொள்ளும் போதோ அது ஒரு சக்தி மிக்க இன்னோவேஷன் என்று சொல்லப்படுகிறது. மேல் சொல்லப்பட்ட காரணிகளின் அளவைப்பொறுத்து அந்த இன்னோவேஷனின் சக்தி மாறுபடுகிறது.

எத்தகைய சூழலில் ஒரு இன்னோவேஷன் நடக்கலாம் ?

ஒரு பொருள் (Product) மேலே குறிப்பிட்ட செலவு, திறன் மற்றும் நேரம் போன்ற காரணிகளினால் புதிய/மேம்பட்ட வகையில் உருவாக்கப்படலாம்.

ஸ்மார்ட் போன் ஒரு நல்ல உதாரணம். அதே போல ஒரு செயல்முறை (process) தனது தன்மையில் இதே காரணிகளால் மேம்படுத்தப் படலாம். பெரும்பாலும் தயாரிப்பு நிறுவனங்களின் பல்வேறு துறைகளிலும் நடைபெறும் பலவகையான செயல்முறைகள் (process) மேபடுத்தப்பட்டாலும் அது ஒரு இன்னோவேஷன் தான். வாடிக்கையாளர்களின் அனுபவத்தில் மதிப்பு கூட்டுவதும் மாறுபட்ட சிந்தனை தான்.

ரயில், பஸ் மற்றும் விமானங்களின் பயணச்சீட்டுகளை ஆன்லைனில் பெற்றுக்கொள்ளும் முறை வாடிக்கையாளருக்கு மேம்பட்ட அனுபவத்தை தருகிறது. அதேபோல ஒரு தொழிலின் கட்டமைப்பு மாதிரி (#Business_Model) வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டாலும் அது ஒரு இன்னோவேஷன் தான். உதாரணமாக IPL கிரிக்கட் போட்டிகளின் வடிவமைப்பை சொல்லலாம். டெஸ்ட் மாட்சுகளை விட, ஒரு நாள் மேட்சுகளை விட விறுவிறுப்பும் பரபரப்பும் நிறைந்த வகையில் புதுமை செய்யப்பட்டு IPL கோடிகளை அள்ளியது அனைவருக்கும் தெரிந்ததே.

நீங்கள் நாம் பெரு வாரியாக பயன் படுத்தும் பல பொருட்கள் மற்றும் சேவைகளை சற்றே ஆராய்ந்து பார்த்தால் அதில் என்ன மாதிரியான இன்னோவேஷன் இருக்கிறது என்று புரிந்து கொள்ளலாம். அவர்களின் போட்டி நிறுவனங்களையும் ஒப்பிட்டு பார்க்கலாம்.

நம்மை சுற்றியுள்ள பல பிரச்சினைகளுக்கும் தேவைகளுக்கும் எப்படி மாறுபட்ட/மேம்படுத்தப்பட்ட தீர்வுகளை தரலாம் என்று யோசிக்க ஆரம்பித்தால் நீங்களும் புதுமை காணலாம். இன்னோவேஷன் மற்றும் சந்தைப்படுத்தல் ஆகிய இரண்டும் தான் ஒரு வியாபாரம் அல்லது தொழிலின் மிக முக்கியமான இரண்டு விஷயங்கள் என்று பிரபல மேலாண்மை குரு பீட்டர் ட்ரக்கர் கூறுவார். இது மறுக்க முடியாத உண்மை…

கட்டுரையாளர்:

சிவராஜா இராமநாதன், தலைமை நிர்வாகி,
நேட்டிவ்லீட் பவுண்டேஷன் மற்றும் நேட்டிவ் ஏஞ்செல்ஸ் நெட்வொர்க்

Source :https://tamil.yourstory.com

#வணிக_வழிகாட்டி

https://www.facebook.com/mannadykaka1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>


Hit Counter provided by technology news