asaduddin-owaisi_president-aimim

வளர்ந்த நிறுவனங்களின் சக்ஸஸ் ஃபார்முலாக்கள்!

வளர்ந்த நிறுவனங்களின் சக்ஸஸ் ஃபார்முலாக்கள்!

#மண்ணடிகாகா

நிறைய முதலீடு, நல்ல ஊழியர்கள் என பல விஷயங்கள் இருந்தும்கூட பல நிறுவனங்கள், முறையாக செயல்படாமல், விரைவிலேயே மூடுவிழா கண்டுவிடுகின்றன. தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட ஒவ்வொரு அமைப்புக்குமே ஏற்ற..இறக்கம் உண்டு. அதனை எப்போதும் மனதில் கொண்டு செயல்பட வேண்டும். அதற்குத் தக்கபடி தேவையான தகவமைப்புகளை ஏற்படுத்திக் கொண்டு செயல்பட்டால் வெற்றி நிச்சயம்….

#தனித்தன்மை

நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஓர் இலகுவான சூழலை ஏற்படுத்தித் தருவது அவசியம். அவர்கள் மகிழ்ச்சியுடன் பணியாற்றுவதற்கான அமைப்பு, ஊழியர்களைப் பாதிக்காத அளவிலான நிறுவனத்தின் விதிமுறைகள் ஆகியவை இருந்தாலே, ஊழியர்கள் திறம்பட செயல்பட உதவும். அதன்மூலம், நிறுவனத்தை வெளியுலகுக்கு வெளிச்சம் போட்டு காண்பிக்க முடியும்.

#இலகுவான_பணிச்சூழல்

ஊழியர்கள் அமைதியான முறையில் வேலை செய்ய ஏற்ற சூழலை அமைத்துக் கொடுத்து, அவர்களை ஊக்குவிக்கும் வகையில் நிறுவனத்தின் செயல்பாடுகள் இருக்க வேண்டும். ஏதோ ஊழியர்களை அடிமைகள் போல் பாவித்து, அவர்களின் உழைப்பை சுரண்டும் விதத்தில் இருக்கக்கூடாது.

ஊழியர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட பணியை, ஆபிசில் முடிக்க முடியாத நிலை ஏற்படுமாயின், அவர்கள் வீட்டுக்கு சென்றபின்னும், அந்த வேலையைச் செய்ய வழிவகைகள் செய்துகொடுக்க வேண்டும். அதற்குரிய, லேப்டாப், டேப்லட் உள்ளிட்ட உபகரணங்கள் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். ஊழியர்கள் மகிழ்ச்சியுடன் பணியை செய்துவந்தால், நிறுவனத்தின் செயல்பாடுகள் பன்மடங்கு அதிகரிக்கும்.

#மண்ணடிகாகா

#தொழில்நுட்ப_வசதிகள்

சமூகத்தில் வெற்றி பெற்ற நிறுவனங்களைக் கூர்ந்து கவனித்தால் தெரியும், அவர்கள் அன்றாட தொழில்நுட்ப வசதிகளை முறையாகப் பயன்படுத்துபவர்களாக இருப்பார்கள். இதன்மூலம், தாங்கள் மட்டும் வளர்ச்சியடைவதோடு இல்லாமல், தங்களைச் சார்ந்து செயல்படும் ஊழியர்கள் மற்றும் பிற துணை நிறுவனங்களையும் அது வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்லும்.

தற்போதைய அவசர கால போட்டியுலகில், தொழில்நுட்பங்களின் துணையோடு செயல்படவில்லையென்றால், தோல்வி என்பது நிச்சயிக்கப்பட்ட ஒன்றாக மாறிவிடும்.

#சிறந்த_ஆவண_நிர்வாகம்

நிறுவனங்களுக்கென உள்ள ஆவணங்கள், தினசரி நடவடிக்கைகள், ஏற்றத்தாழ்வுகள் உள்ளிட்டவைகளை தகுந்த நேரத்தில் குறிப்பெடுத்து சிறந்த முறையில் நிர்வகித்து வருவது மிக முக்கியமான விஷயம். அப்படி நிர்வகித்து வந்தாலே போதும், நிறுவனத்தின் வளர்ச்சிப்போக்கை எளிமையாக கணித்துவிட முடியும். இதை தனியான ஒரு வேலையாக எடுத்துக் கொண்டு சிரமப்படாமல், தினசரி நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றென நினைத்து செய்தாலே போதும். வேலை மிக எளிதாகிவிடும். அப்படி செய்வதால், அன்றைய தின பணித்திறனையும் கணக்கிட்டுக் கொள்ள வசதியாக இருக்கும். அதோடு, எந்தெந்த இடங்களில் பணித்தேக்கம் உண்டாகிறது என்பதையும் கண்டுபிடித்து சரிசெய்து கொள்ள முடியும்…

#மண்ணடிகாகா

#பணியிடச்சூழல்

சிறப்பான வேலை சூழல், பணியிடத்தன்மை., ஊழியர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் நிலை, சிறப்பான குழு நிர்வாகம், ஊழியர்களை ஊக்குவிக்கும் தன்மை உள்ளிட்ட சிறப்புப்பண்புகளைக் கொண்ட நிறுவனங்கள் ஒருபோதும் தோல்வி காண்பதில்லை.

அப்படியே சறுக்கல்கள் வந்தாலும், அதிலிருந்து மிக எளிதாக அவர்களால் மீண்டுவிட முடியும். அதற்கு பணியாளர்களின் ஒத்துழைப்பும் முழுமையாக இருக்கும்.

நன்றி : ஈ நாடு தமிழ், #மண்ணடிகாகா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>


Hit Counter provided by technology news