15350478_1339040689493881_8032312394937080631_n

துபாயில் மறைந்த தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு இரங்கல்!

துபாயில் மறைந்த தமிழக முதல்வர் அம்மா ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கு இரங்கல்!

தோப்புத்துறை முஸ்லிம் சங்கம் – துபாயின் பொதுக்குழுக் கூட்டம் துபாய் தேரா பகுதியில் உள்ள மலபார் உணவகத்தில் 09.12.2016 வெள்ளிக்கிழமை மாலை 8.00 மணியளவில் நடைபெற்றது

மறைந்த தமிழக முதல்வருக்கு இரங்கல் தீர்மானத்துடன் துவங்கியக் கூட்டத்தில் தோப்புத்துறையின் வளர்ச்சி பணிகள் பற்றி ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக புதிய நூலக பணிகள் பற்றி விவாதிக்கப்பட்டது.

தாயகத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் ஒருவரின் நிதியுதவிக் கோரி வந்த கடிதம் பரிசீலிக்கப்பட்டு அங்கு வந்திருந்த அனைவர்களிடமும் நிதி வசூலிக்கப்பட்டு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டது.

சங்கத்தின் தலைவர் O. சாந்தா மெய்தீன் அவர்களின தலைமையில் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் பொருளாளர் H.K. நாசர் காப்பாளர் M.J.அபுல் ஹசன் மூத்த உறுப்பினர்கள் சி. பஷீர் அகமது A சகாபுதீன் A அவுளியா M M ஷர்புதீன் H பசுல் ஹக் MJ அவுளியா J அம்ஜுதீன் நிர்வாகிகள் M கௌது ARY அப்துல் ரெஜாக் S ஜபருல்லா கான் S நஜ்முதீன் MS முஜீப் ஆதம் ஆரிப் மற்றும் அனைத்து அமீரக வாழ் தோப்புத்துறைவாசிகள் அனைவரும் திரளாக கலந்து கொண்டார்கள் நிறைவாக சங்க செயலாளர் JP ஜமால் மெய்தீன் நன்றி கூற கூட்டம் நிறைவுற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>


Hit Counter provided by technology news