marinajallikattu

சட்டங்கள் மாறட்டும்…

#தேர்தலில் நிற்காமல் 10 வருடம் நாட்டின் பிரதமராக இருந்தார் மன்மோகன் சிங்…
 
பாண்டிச்சேரியில் #நாராயணசாமி எம் எல் ஏ ஆகாமல் முதலமைச்சராகி தற்போது எம் எல் ஏவாகி முதல்வராக தொடர்கிறார்.
 
குஜராத்தில் நரேந்திர மோடி முதன்முறை முதல்வரானபோது எம்எல்ஏவாக இல்லையாம் பிறகுதான் எம்எல்ஏவானாராம்!
 
இவர்களெல்லாம் ஆட்சியில் இருந்ததற்கு இருப்பதற்கு சட்டத்தில் இடம் இருக்கும்போது சசிகலா சட்டப்படி முதல்வராவதில் என்ன குற்றம் கண்டீர்கள்?
 
#ஜெயலலிதா உயிரோடு இருக்கும்வரை சசிகலாவை எனது உடன்பிறவா சகோதரி என் உயிர்த்தோழி என்றுதான் குறிப்பிட்டாரே தவிர ஒருபோதும் என் வீட்டு வேலைக்காரி என் உதவியாளர் என்று குறிப்பிட்டதே இல்லை, போயஸ் கார்டனை விட்டு வெளியேற்றியபோதுகூட சொன்னதில்லை தஞ்சாவூரில் நடந்த உலகத்தமிழ் மாநாட்டின்போது சசிகலாவையும் அவரைச் சார்ந்தவர்களையும் தனிமேடையில் அமர வைத்து பார்த்தார் அன்றெல்லாம் சசிகலாவை அனைத்து விஷயங்களிலும் #ஜெயலலிதா முன்னிலைப்படுத்தியபோது வாய்மூடி மௌனமாக இருந்தவர்கள் இப்பொழுது ஆயாம்மா ஆட்டுக்குட்டிம்மா என்று புலம்புவது ஏன்?
 
சட்டப்படிதான் எல்லாம் நடக்கிறது மக்களுக்கு விருப்பமில்லையென்றால் 6 மாதத்திற்குள் நடக்கும் இடைத்தேர்தலில் தோற்கடிக்கட்டும் அவரை அரசியலைவிட்டே விரட்டியடிக்கட்டும்….
 
சில #வடநாட்டு தொலைக்காட்சி சேனல்களின் கோபமூட்டும் விவாதங்களைப் பார்த்த பின்னர் இதை எழுதத்தோன்றியது. இதைப்படித்தவுடன் சசிகலாவை ஆதரிப்பவன் என்று எண்ண வேண்டாம் #அம்மா#சின்னம்மா என்று அழைத்து கூழைக் கும்பிடு போடும் கூன் பாண்டிகளை எதிர்ப்பவன் ஆனால் சட்டப்படி நடக்கும் விஷயங்களை நாம் ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும்.
 
சட்டங்கள் மாறட்டும்…
 
#mannadykaka
 
Thanks: HK Nazar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>


Hit Counter provided by technology news