thaniyarasu_18199_19327

ஜெயலலிதா வீட்டில் சோதனை நடத்தியதை ஏற்றுக்கொள்ள முடியாது! தகிக்கும் தனியரசு

ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தில் சோதனை நடத்தியது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கொங்கு இளைஞர் பேரவை பொதுச் செயலாளரான தனியரசு எம்.எல்.ஏ தெரிவித்தார்.

 

 

சுதந்திரப் போராட்ட வீரரான வ.உ.சிதம்பரனாரின் 81-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி நெல்லையில் உள்ள அவரது மணிமண்டபத்தில் பல்வேறு அரசியல் கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அரசு சார்பாக ஆதிதிராவிட நலத்துறை அமைச்சரான ராஜலெட்சுமி, நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உள்ளிட்ட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

 

தி.மு.க சார்பாக எம்.எல்.ஏ-க்களான டி.பி.எம்.மைதீன்கான், ஏ.எல்.எஸ்.லட்சுமணன் ஆகியோர் வ.உ.சி சிலைக்கு மாலை அணிவித்தனர். அத்துடன், பல்வேறு அரசியல் கட்சியினரும் சமுதாய அமைப்பினரும் மாலை அணிவித்தனர். கொங்கு இளைஞர் பேரவைத் தலைவரான தனியரசு வ.உ.சி சிலைக்கு மாலை அணிவித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ’முன்னாள் முதல்வர் வாழ்ந்த வேதா இல்லத்தில் சோதனை நடத்தியதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் இல்லாவிட்டால் இந்த அரசு கிடையாது; இப்போது இருக்கும் முதல்வரும், துணை முதல்வரும் கிடையாது. ஒரு எம்.எல்.ஏ-வும் இருக்க முடியாது.

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>


Hit Counter provided by technology news