gallerye_18261882_735402

நீரைக் காப்போம்; நிலத்தைக் காப்போம்

இறைவனின் அருட்கொடைகளில் ஒன்றான தண்ணீர் குறித்த  மனிதனின் பார்வை குறுகி வருவது எதிர்காலத்தில் மிகப்பெரிய சுற்றுச்சூழல் பாதிப்புக்கு வழி வகுக்கும் என்பது கவலை தரும் விஷயம்.

அவ்வப்போது பெய்யக்கூடிய மழைநீரை சேமித்து வறட்சி காலத்தில் பயன்படுத்துவதற்கான திட்டமிடல் இல்லாததால் முற்றிலும் வீணாகிறது..

gallerye_18261882_735402
ஏரி, குளங்கள் தூர்வாரி மழைநீரை சேமிக்கும் வகையிலும், கால்வாய்களில் தடுப்பணை அமைத்து கடலில் கலக்கும் மழைநீரை தடுத்து பயன்படுத்த மத்திய, மாநில அரசுகள் தவறிய காரணமாக பல்லாயிரம் கன அடி மழைநீர் வீணாகிறது…

கிராமத்தின் நடுவில் கிணறு அமைத்து பொதுவாக பயன்படுத்திய காலம் போய், இன்று  வீட்டுக்கு வீடு ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் உறிஞ்சப்படுவதுடன், மிகப்பெரிய வணிக சாம்ராஜ்யமாக தண்ணீர் விற்பனை மாறி வருகிறது என்பதும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களை கவலைப்பட வைக்கிறது.

நவீனம் என்ற பெயரில்  நடைபாதைகளிலும், வீட்டு வளாகங்களிலும் பதிக்கப்படும் பேவர் ப்ளாக் எனும் அலங்கார தரை ஓடுகள் கூட  மழைநீர் பூமிக்கடியில் செல்வதற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி வருகிறது…

 குறைந்த செலவு, பதிப்பிக்க காலம் மிச்சம் என்று பேவர் ப்ளாக் ஓடுகளை தற்போது சாலையமைக்கவும் உள்ளாட்சி அமைப்புகள் பயன்படுத்த துவங்கியுள்ளன.
சாதாரண செம்மண் தரையில் ஸீரோ ஜல்லி பரவி பேவர் ப்ளாக் பதிக்கும் இடங்களில் குறைந்தளவு மழைநீர் உட்புக வாய்ப்புள்ளது..ஆனால் உள்ளாட்சி அமைப்புகள் ஏற்கனவே அமைத்துள்ள காங்கிரீட் சாலை அல்லது தார் சாலைகள் மீது பேவர் ப்ளாக் கற்களை பதிப்பதால் மழைநீர் பூமிக்குள் இறங்குவது முற்றிலும் தடைபடும் சூழல் உள்ளது…

நெல்லையில் தார் சாலை மீது போடப்பட்டுள்ள பேவர பிளாக் ரோடு

நெல்லையில் தார் சாலை மீது போடப்பட்டுள்ள பேவர பிளாக் ரோடு

வருங்காலங்களில் மணல்பரப்பு தெரியாத அளவுக்கு நவீனம் என்று அலங்கார ஓடுகள் பதிப்பது தொடரும் நிலையில், மழைநீர் பூமிக்கடியில் செல்வது தடைபடுவதுடன் பூமி வெப்பமடைந்து நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறையும் ஆபத்து ஏற்படுவது உறுதி…

சமூக ஆர்வலர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>


Hit Counter provided by technology news