0000

திருக்குர்ஆன் போட்டி பரிசளிப்பு மற்றும் இஸ்லாமிய மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி

தோப்புத்துறை JAQH மர்கஸ் நடத்திய 14ம் ஆண்டு திருக்குர்ஆன் போட்டி பரிசளிப்பு மற்றும் இஸ்லாமிய மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி 15-09-2018 சனிக்கிழமை மாலை 7.30 மணியளவில் தோப்புத்துறை ஹத்தீப் தெரு சந்திப்பில் நடைப்பெற்றது.

00002 (3)

 

இந்நிகழ்ச்சிக்கு சகோ. S. சபீர் அகமது அவர்கள் தலைமை ஏற்க, சகோ. A. அதூப் அவர்கள் கிராத் ஓதி துவங்கி வைத்தார்கள். சகோ. S. அப்துல் அஜீஸ் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்கள்.

குர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை என்னும் தலைப்பில் ஹதீஸ் கலை ஆய்வாளர் மௌலவி. S. அப்பாஸ் அலி அவர்கள் தனக்கே உரிய பாணியில் சிறப்புரை ஆற்றினார்கள்

 

00002 (1).

 

இறுதியில் கடந்த ரமழானில் நடத்தப்பட்ட 14ஆம் ஆண்டு திருக்குர்ஆன் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் அறிவிக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. இம்முறை மக்களின் ஆர்வத்தை அதிகப்படுத்தும் விதமாக கீழ்க்கண்ட பரிசுகள் அறிவிக்கப்பட்டன.

1. முதல் பரிசு – ஃபிரிட்ஜ்
J.ஜெஃபீனா
ஜாஹிர் உசேன், தொப்புத்துறை

2. இரண்டாம் பரிசு – வாசிங் மெஷின்
A.ரெஜியா பேகம்
கள்ளார், நாகப்பட்டினம்

3. மூன்றாம் பரிசு – மிக்ஸி
H.ரஹ்மத் நிஷா
க/பெ. M.ஹலீல் ரஹ்மான்
தோப்புத்துறை

மேலும் 10 சிறப்பு பரிசுகள், நிகழ்ச்சியில் பங்குபெற்ற அனைவருக்கும் ஆறுதல் பரிசுகள் உட்பட மொத்தம் ₹ 75,000 மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்பட்டது. போட்டியில் தோப்புத்துறை மற்றும் கட்டிமேடு, நாகப்பட்டினம், கள்ளார், தலைஞாயிறு, கோடியாக்கரை என பல்வேறு ஊரை சேர்ந்த பெண்கள் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் தோப்புத்துறை மற்றும் மற்றும் வெளியூரை சேர்ந்த ஏராளமான ஆண்களும், பெண்களும், தோப்புத்துறை துபாய் சங்கம் மற்றும் உள்ளூர் இயக்கங்களை சார்ந்தவர்களும் கலந்துக்கொண்டனர்.

மர்கஸ் இமாம் A. அஹ்மது ரபீக் நன்றியும் வாழ்த்துக்கலும் தெரிவிக்க, துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

இந்நிகழ்ச்சியை மர்கஸ் நிர்வாகிகள் சிற்ப்பாக ஏற்ப்பாடு செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>


Hit Counter provided by technology news