womencries

ஒரு பெண்ணின் குமுறல்

ஒரு பெண்ணின் குமுறல்
காற்றும் வெயிலும் மழையும்
அனுமதி இன்றி நுழையும்
சாலை ஓரம் முளைத்த
ஓலையில் கட்டிய குடிசை

பகலவன் பணியை முடித்து
தலை சாயும் நேரம் …….

உடைந்து பூசிய மண் அடுப்பு
அதில் காய்ந்த வரட்டி மூன்று
பொறுக்கி வந்த சுள்ளி விறகு

பசித்தவன் வயிறு போல்
வேகமாய் எரியுது அடுப்பு
பறிகொடுத்தவன் மனம் போல்
பதறிக் கொதிக்குது உலையும்

கூலி வாங்கி மளிகையுடன் வரும்
கணவனுக்காய் காத்திருந்தாள்
பசியில் சோர்ந்து பிள்ளைகள்
நிசியால் அயர்ந்தது கண்கள்

நேரம் யுகமாய் சென்றது
பாரமாய் இருள் சூழ்ந்தது
ஈரப் பசை இல்லாமல்
வானம் பார்த்த பூமி போல்
வறண்டு போயின நாவுகள்

வாடிய பிஞ்சுகளின் முகம் கண்டு
ஆடிப் போனது அவள் உள்ளம்
நாடிய கணவன் இடம் காண
தேடி வீதியில் புறப்பட்டாள்

ஆதாரம் இல்லாத கொடிபோல்
அலையில் ஆடிடும் ஓடம்போல்
ஆடி போதையில் அவன் வந்தான்
இது நாளும் நடக்கும் சம்பவம்தான்

உணர்வு உழுத்து பொறுமை இழந்தாள்
உள்ளம் வெகுண்டு பொங்கி எழுந்தாள்
உரக்கக் கத்தினாள் உள்ளக் குமுறலில்
உனக்குப் பெயர் கொண்டவனா – இல்லை
உயிர் கொண்டவனா?

thanks to :அமுதா அம்மு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>


Hit Counter provided by technology news