karadi

குட்டிக் கரடி கற்ற பாடம்

குட்டிக் கரடி கற்ற பாடம்

சித்திரமே என் கண்ணு
சிந்திக்க சொல்வேன் கதை ஒன்னு

ஊருக்கு வெளியே பெருங்காடு
உள்ளே போவது பெரும்பாடு
அங்கே ஒரு கரடிக்குட்டி
அன்பால் அம்மாவிடம் வாழ்ந்திடுச்சாம்
அவள் அறிவுரை கேட்டு நடந்திருச்சாம்
காய்கறி கிழங்குகள் பல உண்டு
கொழு கொழுனு வளர்ந்திருச்சாம்

குரும்புக்காரக் குட்டிக்கு
குள்ள நரி நட்பு கிடைசிருச்சாம்
தந்திரம் கொண்ட குள்ள நரி
கரடியை அடித்து திண்பதற்கு
திட்டம் ஒன்று வகுத்திருச்சாம்

வேடிக்கையாக பேசி நரி
விளையாட கரடியை அழைச்சிருச்சாம்
அம்மா அறிவுரை மறந்துவிட்டு
நரியுடன் கரடி சென்றிருச்சாம்
காட்டுக்குள்ளே வெகுதூரம் – நரி
கரடியை கூட்டிப் போயிருச்சாம்

சமயம் பார்த்து கரடியின் மேல்
குள்ள நரி பாய்ந்திருச்சாம்
பதறி ஓடிய கரடிக்குட்டி
புதருக்குள்ளே பதுங்கிருச்சாம்
காட்டில் இருள் சூழ்ந்ததனால் – கரடி
வழி தெரியாமல் அழுதிருச்சாம்
கரடியை பார்த்த ஒரு யானை
அதை முதுகில் தூக்கி நடந்திருச்சாம்
தும்பிக்கையால் பழம் பறித்து
குட்டிக்கு உண்ணக்கொடுத்திருச்சாம்
அழுகை நின்றதும் கரடியை
அதன் தாயிடம் கொண்டு சேர்த்திடுச்சாம்

அம்மா சொல்லை தட்டி நடந்தால்
ஆபத்து வந்து சேர்ந்து விடும்
என்பதை குட்டி உணர்த்திடுச்சாம்
அம்மாவின் சொற்படி நடந்திடுச்சாம்

கண்ணே கரடியின் கதைக் கேட்டாய்
கருத்துடன் நீயும் இனி நடந்திடுவாய்….

-அமுதா அம்மு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>


Hit Counter provided by technology news